×

சபரீசனை சந்தித்த ஓபிஎஸ்- கொதித்தெழுந்த ஆர்பி உதயகுமார்

 

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி உட்பட முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஓபிஎஸ்- ஐ வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையில் அவரை குறித்து ஆர்.பி உதயகுமார் கோபத்துடன் பேசியதால் தொண்டர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய ஆர்.பி. உதயகுமார், “ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு , சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த சபரீஷனை சந்தித்து பேசிய காட்சிகள்,  ஊடகங்கள் மற்றும் செய்தித்தாளில் வெளியானது. ஜெயலலிதா இருந்த காலத்தில் ஓபிஎஸ் இதுபோன்ற செயலில் ஈடுபடுவாரா? நியாயமா? தர்மமா? எதிர்க்கட்சியினருடன் ஜெயலலிதா இருக்கும் காலத்தில் துணிச்சலாக ஓபிஎஸ் பேசுவாரா ? திமுக கிளைச் செயலாளருடனாவது பேசுவதற்கு துணிவு இருந்ததா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.