“ஜெ., இல்லையென்றால் எடப்பாடி வெளியில் தெரிந்திருப்பாரா? சசிகலா இல்லையென்றால் நாட்டுக்கு அறிமுகமாகியிருப்பாரா?”
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தலைமை கழக செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆர்ப்பாட்டத்தில் வயிற்று எரிச்சலை கொட்டியுள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே பேசுகிறார் எடப்பாடி. இதற்கு முன்னால் ஆட்சியமைத்தவர் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு பேச வேண்டும். 15 மாத ஆட்சி காலத்தில் ஸ்டாலின் எவ்வளவோ செய்துள்ளார். மக்கள் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலினின் மக்கள் செல்வாக்கை தாங்க முடியாமல் ஆதரமல்லாமல் பேசி வருகிறார். சொத்து வரி உயர்வுக்கு யார் காரணம், சொத்து வரி குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியை வைத்தே பேசினார் ஸ்டாலின். வரி ஏற்றப்பட்டத்திற்கு எந்த குடியுரிமை சங்கங்கள் நீதி மன்றம் சென்றார்கள்? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி மின்சாரத் துறையில் 1.75 லட்சத்திற்கு மேல் கடனை கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.நான் வழக்கறிஞர் என்ற முறையில் சொல்கிறேன் கொடநாடு வழக்கில் திடுக்கிடும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. ஜெயலலிதா இல்லை என்றால் எடப்பாடி தெரிந்திருப்பாரா? சசிகலா இல்லை என்றால் இந்த நாட்டுக்கு அறிமுகமாகியிருப்பாரா? விஜய பாஸ்கர் வீட்டை பார்த்தால் எலிசபெத் மாளிகையை பார்ப்பதுபோல் உள்ளது. அதிமுக ஆட்சியில் எவ்வளவு கொலை கொள்ளை நிகழ்வுகள் நடந்துள்ளது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. உங்கள் ஆட்சியிலும் தற்போது உள்ள திமுக ஆட்சியில் நடந்துள்ள கொலை, கொள்ளை நடந்து பற்றி விவாதத்திற்கு தயாரா? ஈ.பி.எஸ். பினாமி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. அதை எல்லாம் மூடி மறைக்கவே ஆர்ப்பாட்டம், இன்னும் சில நாட்களில் அவரை பற்றியும் தகவல்கள் வெளியாகும்” எனக் கூறினார்.
ஆ.ராசா பேசிய சர்ச்சை கருத்துக்கு பாஜக சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அவர் 2ஜி வழக்கையே பார்த்தவர் எனவே அவர் இதை பார்த்துக்கொள்வார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.