எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்- ஆர்எஸ் பாரதி
சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் எம்.பி ஜின்னா படத்திறப்பு விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “உங்களில் சிலருக்கு பதவிக்கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கும். இருப்பதும் நியாயம்தான். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர். இதுபோன்று பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் தான். இதையெல்லாம் ஜீரணித்து கொண்டுதான் இருக்க வேண்டும். எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். ஆனால் எங்களுக்கு காலதாமதமாகவே பதவி கிடைத்தது. இருப்பினும் ஒரே கொடி, ஒரே கட்சி என பொறுமையாக இருந்த காரணத்தால் என்றாவது ஒருநாள் பதவி வந்தே தீரும். அதேபோன்றுதான் எனக்கு 63 வயதில் பதவி கிடைத்தது. திமுகவுக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் பதவி தேடிவரும் அதற்கு நானே உதாரணம்.
கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள். வைகோ முதுகில் குத்திவிட்டு சென்றார். தற்போது கொஞ்சி குலவுகின்றார்” எனக் கூறினார்.