×

நம் நாடு உலக வல்லரசாக மாறாமல் போகலாம், ஆனால் நிச்சயமாக உலக குருவாக முடியும்... மோகன் பகவத் நம்பிக்கை
 

 

நம் நாடு உலக வல்லரசாக மாறாமல் போகலாம், ஆனால்  நிச்சயமாக உலக குருவாக முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இமாச்சல பிரதேசத்துக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மோகன் பகவத் கூறியதாவது: ஊடகங்கள் எங்களை அரசாங்கத்தின் ரிமோட் கண்ட்ரோல் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. இருப்பினும், எங்கள் உறுப்பினர்களில் சிலர் நிச்சயமாக அரசாங்கத்தின் அங்கத்தினர். எங்களின் சுயம் சேவகர்களுக்கு அரசாங்கம் எந்த விதமான உத்தரவாதத்தையும் வழங்குவதில்லை. 

அரசிடம் இருந்து எங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு என் பதில் என்னவென்றால் நமக்கு சொந்தமானதைக் கூட இழக்க நேரிடலாம். கதா, குவாத் (மூலிகை கலவைகள்) மற்றும் சுகாதாரம் போன்றவை வாயிலாக நமது பாரம்பரிய இந்திய வைத்தியம் நம்மை பார்த்தது. இப்போது உலகம் இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்திய மாதிரியை பின்பற்ற விரும்புகிறது. நம் நாடு உலக வல்லரசாக மாறாமல் போகலாம், ஆனால் அது நிச்சயமாக உலக குருவாக முடியும். 

உள்ளூா் மக்கள் ஒன்றுபடாததால், பிரிக்கப்படாத இந்திய நிலம் பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு படையெடுப்பாளர்களுடன் பல போர்களில் தோல்வி அடைந்தது. சமூக சீர்த்திருத்தவாதி பி.ஆர். அம்பேத்கரை மேற்கோள் காட்டி, நாம் ஒருபோதும் யாருடைய பலத்தினாலும் தோற்கடிக்கப்படுவதில்லை, ஆனால் நம்முடைய சொந்த பலவீனங்களால் தோற்கடிக்கப்படுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.