×

சாம்பார் சாதம், தயிர்சாதம் - பிரதமர் நிகழ்ச்சியை வறுத்தெடுத்த திமுக

 

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி 100ஆவது எபிசோடை கடந்திருக்கிறது.  இதை பாஜவினர் கொண்டாடி வருகின்றனர்.  திமுகவோ இந்த விவகாரத்தை வறுத்தெடுத்திருக்கிறது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில், சின்னதம்பி - பெரியதம்பி  என்கிற பகுதியில் பிரதமரின் இந்த நிகழ்ச்சியை போட்டு வறுத்தெடுத்து இருக்கிறார்கள்.

அது  என்னாண்ணே.. பிரதமர் மோடி வானொலி பேச்சுக்கு குரங்கு குளியல்’னு பேர் வச்சிருக்காங்க.  குரங்கு குளியலா? என்ன உளறுகிறாய்? மங்கி பாத்துன்னா தமிழிலே குரங்கு குளியல்னு தானே அர்த்தம்.   அது மங்கி பாத் இல்லை தம்பி.. மன் கி பாத்.  ஹிந்தி பெயர். தமிழில் மனதின் குரல் என்று பொருள்.   ஓ.. அப்படியா மன் கி பாத்  என்று சொல்றது என் காதிலே மங்கி பாத் என்று விழுந்து தொலைத்தது. 

 அது என்னடா பிரதமர் மக்களோட பேசுறதுக்கு ஒரு வினோதமான பேரா  குரங்கு குளியல்னு வச்சிட்டாங்களே என்று இவ்வளவு நாளா மண்டையை போட்டு பிச்சிக்கிட்டு இருந்தேன்.  இப்பதான் அது மனதின் குரல் என்று புரிந்தது .  விட்டுத்தள்ளுண்ணே..நான் நினைச்சதிலேயேயும் தப்பில்ல .  மங்கின்னா இந்தியிலே மனதில்னு சொல்ற... இதை நான் மங்கின்னு நினைத்து குரங்கு பொருள் கொண்டேன்.  மனம் ஒரு குரங்கு என்று தமிழிலே கூட சொல்லுவாங்களே...

 உன்னை சொல்லி குற்றமில்லை.   பேர் வைக்கிறவங்க யோசித்து பெயர் வைக்கணும்.  நீ மன் கி பாத் என்பதை   குரங்கு குளியல்னு புரிஞ்சுகிட்டே.   சமீபத்திலே இந்தி தெரியாத ஒரு கர்நாடக நண்பரை சந்தித்தேன்.   அவங்க மாநிலத்திலே பிசிபிலா பாத் (சாம்பார் சாதம்) கர்டு பாத் (தயிர் சாதம் )போல இது ஏதோ மங்கி பாத்துன்னு  நினைத்ததை சொன்னார்.  

 இப்படித்தானே ஹிந்தியை திணிக்க நினைத்து நாட்டையே குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.   குழப்பமா பிரதமர் யாரும் செய்யாத சாதனையை செய்து கொண்டிருப்பதாக பெரிய தம்பட்டம் வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள் .  நல்ல வேலை கொரோனா வந்தப்ப எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை மாலை கைதட்டி மணி அடிக்க அழைப்பு விடுத்தது போல,  பிரதமர் ஞாயிற்றுக்கிழமை மணி அடித்து தனது மன் கி பாத்   நிகழ்ச்சியை கேட்கச் செய்யுமாறு கூறாமல் விட்டார் .

உனக்கு கிண்டலா தெரியுது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மார்ச் 31ஆம் தேதி பிரதமரின் அந்த நிகழ்ச்சியின் நூறாவது எபிசோடு அத்தியாயம் முடிஞ்சிடுச்சு ஐநாவிலே கூட அதை ஒளிபரப்ப ஏற்பாடு செஞ்சதா ஊடகங்களில் செய்தி வெளிவந்ததை பார்க்கவில்லையா? 

பார்த்தேன்.  பிரதமரின் மன் கி பாத் நூறாவது எபிசோடு என்று சொன்னதும் எனக்கு பெரிய சந்தேகம் வந்துச்சு.   என்ன சந்தேகம்? அது பிரதமர் டிவி சீரியல்ல கூட நடிக்க ஆரம்பிச்சுட்டாரு..  பிரதமர் நடிக்க கூடாதா ? அப்படி இல்லன்னு அரசியல் நடிப்புக்கு ஆஸ்கார் விருது விருது வழங்கும் என்றால் அது நம்ம பிரதமரை விட்டு வேற யாருக்கு போகும் . அது மட்டும் இல்லை அண்ணே ..சிறந்த உடை தயாரிப்பாளர், சிறந்த உரையாடல், எழுத்தாளர் போன்ற பல விருதுகளையும் நம்ம பிரதமரின் குழு தட்டி வந்து விடுமே.

 அதை விடு,  இந்த மனதின் குரல் மூலம் என்ன சாதித்தார் பிரதமர்? இதற்கு பிஜேபி ஏன் இத்தனை தம்பட்டம் செய்கிறது. இதெல்லாம் ஒரு மடைமாற்று அரசியல்தான். மோடி அரசின் பல்வேறு துறை தோல்விகளை திசை திருப்ப திட்டமிட்டு நடத்தும் நாடகங்கள் இவை.  இந்த நாடகங்களை மக்கள் நம்புகிறார்களா ?நம்ப வைக்கத்தான் அரும்பாடு படுகின்றனர்.

 ஜனநாயகத்தின் அடித்தளங்களாகவும் தூண்களாகவும் விளங்கும் எல்லா சக்திகளும் பிஜேபி ஆட்சியில் நசுக்கப்பட்டு எழுப்பிடும் ஓலங்கள் யார் காதிலும் விழக்கூடாது என்பதற்கும்,  எழுப்பப்படும் பதில் சத்தம் தான் மனதின் குரல் .  மனசாட்சியை தொலைத்து விட்டவர்கள் அதனை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் என்று வறுத்தெடுத்துள்ளார்கள்.