×

எஸ்.டி.பி.ஐ - பாஜக மாநில நிர்வாகிகளின் அடுத்தடுத்த படுகொலைகளால் பதற்றம் அதிகரிப்பு

 

எஸ்.டி.பி.ஐ - பாஜக மாநில  நிர்வாகிகளின் அடுத்தடுத்த படுகொலைகளால் பதற்றம் அதிகரிப்பதால் ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

 கேரள மாநிலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவர் ஷான். இவர்  ஆலப்புழா மாவட்டம் மன்னஞ்சேரி பகுதியில் நேற்று இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவரது பைக்கை கார் ஒன்று வேகமாக வந்து இடி. த்து தள்ளியிருக்கிறது இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருக்கிறார் ஷான்.  அப்போது காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி தள்ளியிருக்கிறது. 

 உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஷானை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு 2:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  உடனே எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலத் தலைவர் எம். கே. பைஜி,   ஷான்  படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கேரளாவில் பல பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பதற்றம் நீடித்தது .

இந்த நிலையில் பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன்(40) இன்று காலையில் வெள்ளிகிணறு பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். 

நேற்று இரவு எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலையில் பாஜக மாநில நிர்வாகி கொல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவின் பல பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.

 பழிக்குப்பழியாக ரஞ்சித் சீனிவாசன் படுகொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷான் படுகொலைக்கு காரணம் பாஜகவினர் என்று எஸ்டிபிஐ கட்சியினர் குற்றம் சாட்டி இருந்த நிலையில்,  ரஞ்சித் சீனிவாசனின் படுகொலைக்கு காரணம் எஸ்டிபிஐ கட்சி தான் காரணம் என்று பாஜக தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

 இந்தப் படுகொலைகளினால் மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்திருக்கிறார்.  பதற்றம் நீடிப்பதால் ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.