செருப்பை காட்டிய சீமான் - போலீசுக்கு போன திமுக
காலில் கிடந்த செருப்பை கழற்றி தூக்கி காட்டி எச்சரித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
சீமானை சங்கி என்றும் பாஜகவின் பி டீம் என்றும் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனால் ஆவேசம் கொண்டு திமுகவினரையும், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினையும், திமுகவின் இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் சீமான், உச்சகட்டமாக சென்னை அம்பத்தூரில் அண்மையில் நடந்த நிகழ்வில் பேசியபோது செருப்பைத் தூக்கிக் காட்டி எச்சரித்து பேசியிருக்கிறார்.
திமுகவுக்கு எதிராக இதுவரைக்கும் சீமான் பேசியதிலேயே இந்த பேச்சுதான் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. ’’யாருடா உண்மையான சங்கி. திமுகதாண்டா உண்மையான சங்கி. சொங்கிப்பயளுகளா? யார பார்த்து யாரடா சங்கின்னு சொல்லுறீங்க. செருப்பு இருக்கு பாருங்க... ’’என்று சொல்லிக்கொண்டே காலில் கிடந்த செருப்பை கழற்றி தூக்கிக்காட்டி எச்சரிக்கிறார்.
தொடர்ந்து அவர், ’’ஜனநாயகவாதியாக இருக்கும்படி என்னை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு. என்னை வெறியனாக்கிடாத... சிக்கலாகிடும். மறுபடியும் என்னை கராத்தே பயிற்சிக்கு போங்கன்னு என் பொண்டாட்டி சொல்லுறா. வேணாம்னு விலகி நிக்குறதுக்கு காரணம் இதுதான். சிக்கலாகிடும். தொலைச்சிபுடுவேன். கண்ட நாயெல்லாம் சங்கி சங்கின்னு. ஜிங்கி ஜிங்கின்னு ஆடேன். நாயே என்னை பேசலேன்னா நாலு வீட்டுல கஞ்சி ஊத்தமாட்டான். நான் புலி என்பதால் போய் ஒரே அடியாக அடிச்சு கொல்லணும். உன்னை எல்லாம் அடிச்சு கொன்னுட்டு ஜெயிலுக்கு போறதுக்காடா என் ஆத்தா அப்பன் பெத்து வளர்த்திருக்காங்க. சொல்லு..அதுக்கா கராத்தே, சிலம்பம், குஸ்தி எல்லா கலைகளும் கத்துக்கிட்டு இப்பேர்பட்ட தலைவனின்(பிரபாகரன்) பிள்ளையாக நின்னுக்கிட்டு இருக்கேன். பயித்தியகார பசங்க உயிரோட இருக்கணும்னா ஒரு ஓரமா போய் நிம்மதியா படுத்து தூங்குங்க.’’என்றார்.
அந்த செருப்பை அவர் எந்த அர்த்தத்தில் கழற்றி தூக்கி காட்டினாரோ தெரியவில்லை. ஆனால் டுவிட்டரில் அவரது தொண்டர்கள், வேறு விதமாக பதிவிட்டு வருகிறார்கள். #கதறும்_திமுக என்ற ஹேஷ்டேக்கு பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
சீமான் தூக்கி காட்டிய செருப்பு கருப்பு சிவப்பு நிறம். அந்த செருப்பைத்தான் அவர் காலில் போட்டிருக்கிறார். தற்போது மட்டுமல்ல. அவர் 2019ம் ஆண்டே இந்த செருப்பை போட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
எப்பா டேய்.. கையில் தூக்கி காமிச்சது வேனா இன்னிக்கார்க்கும்.. திராவிடத்த காலுக்கு கீழ போட்டு நாள் ஆச்சி...என்கிறார் நெல்லை செல்வின். இந்த செருப்பு கலர் ஏதோ கட்சி கொடி குறியீடாக இருக்குமோ? நமக்கு எதுக்கு வம்பு? பேயிக்கும் பேயிக்கும் சண்டை என்கிறார் கொங்கு சித்தர் என்பவர். திராவிட செருப்பு என்றும், அதை சீமான் காலில் போட்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், திமுக மீது தொடர்ந்து அவதூறுகளையும், அரசியல் அண்ணா விரித்த நாகரீகத்தையும் அரங்கேற்றி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.