உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதை நான் வரவேற்கிறேன்- சீமான்
திமுகதான் தொண்ணூறு சதவீதம் சங்கி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முத்தமிழ் காவலர் ஐயா கி.ஆ.பெ விசுவநாதம் அவர்களின் 27- ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு விசுவநாதம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திமுகதான் உண்மையான சங்கி. திமுகவில் தொண்ணூறு விழுக்காடு இந்துக்கள்தான் உள்ளனர். இல்லம் தேடி கல்வி என்பது ஆர்எஸ்எஸ், பிஜேபி கொள்கை. தமிழ் தாய் வாழ்த்து முழு பாடலையும் கொண்டுவர பாஜக சொல்கிறது என்றால் அதை பாராட்டத்தான் வேண்டும். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இருக்காது. அதற்கு பதில் வேறு பாடல் வைப்போம். தமிழக பாடநூல் புத்தங்களை அச்சிட வேறு மாநிலங்களுக்கு கொடுப்பது தேவையற்றது. 400க்கும் மேற்பட்ட நாம் தமிழர் பிள்ளைகளை சிங்கப்பூர் அரசு திருப்பி அனுப்பி உள்ளது, இதை ஏன் அவர்கள் செய்கிறார்கள் என்று புரியவில்லை. அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சிங்கப்பூரில் எங்களது கட்சி வலிமையாக இருந்தது. தற்போது இல்லை, எங்களின் நடவடிக்கைகளை முடக்கி விட்டார்கள்.
திமுகவை நான் எதிர்ப்பேன், பிரபாகரனுக்கு கருணாநிதியை பிடிக்காது. எனக்கும் கருணாநிதியை பிடிக்காது. பாஜக இவ்வளவு பெரும்பான்மையாக வெல்வதற்கு காரணம் காங்கிரஸ்.உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதை நான் வரவேற்கிறேன்” எனக் கூறினார்.