×

பாஜக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்- செல்லூர் ராஜூ

 

குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதன் பிரதிபலிப்பு அனைத்து இடங்களிலும் கிடைக்குமா என்பது கூட்டணியை பொறுத்து தான் தெரியும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை திண்டுக்கல் மெயின் ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்ல வேண்டியதாக இருந்தது. 

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுக இரட்டை இலை சின்ன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதைப்பற்றி கூற இயலாது. ஆனாலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெற்று வெற்றி பெறும். குஜராத்தில் பாஜக வெற்றி என்பது அது உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மோடியின் சொந்த ஊர் ஏற்கனவே அங்கு பிஜேபி ஆட்சியில் உள்ளது. அங்குள்ள தமிழர்கள் அனைவரும் பிஜேபிக்கு ஓட்டு அளித்துள்ளனர். இதனால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதன் பிரதிபலிப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருக்குமா என்பது கூட்டணியை பொறுத்து தான் தெரியும். 

தமிழகத்தில் வளர்ந்து வரும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஆனால் தேர்தல் நேரத்திலே அது குறித்து தெரிய வரும். மேலும் கட்சி தாவல் என்பது அவரவர் சுய விருப்பம், ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற சிலர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். இது அவர்களின் சொந்த விருப்பமே தவிர இதில்  கருத்துச் சொல்ல ஒன்றும் இல்லை” என தெரிவித்தார்