×

“விஜயதரணியிடம் பாஜகவுக்கு போகாதீங்கனு அப்பவே சொன்னேன்” போட்டுடைத்த செல்வப்பெருந்தகை

 

பாஜகவில் சேர்ந்து 6 மாதங்கள் ஆகியும் பதவி இல்லை என்ற விஜயதரணியின் ஆதங்கம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “முதலமைச்சர் நாளை செல்லும் அமெரிக்கா பயணம் வெற்றி பயணம் ஆக வேண்டும்.  நிறைய முதலீடுகளை ஈர்த்து வர செல்கிறார் அதனால் அமெரிக்க பயனும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு எடுத்து வரவே முதல்வர் அமெரிக்கா செல்கிறார். உலக அரங்கில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் தொழில்துறையும்‌ சிறப்பாக செயல்படுகிறது.


விஜயதாரணியை பாஜக உள்ளே இழுத்து கதவை சாத்திட்டாங்க...  அவரிடம் அரை மணி நேரம் பேசினேன்..நீ போற இடம் சரி, இல்லை வேண்டாம் என கூறினேன். சட்டமன்ற பதவியும் போய்விடும், மரியாதையும் கொடுக்க மாட்டார்கள் என்று கூறினேன். இந்த தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள்‌ என்றேன். ஆனால் கேட்காமல் அங்கே சென்று விஜயதாரணி மாட்டிக்கொண்டார்” என்றார்.


விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ராகுல் காந்தி காரணமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தலைவர் ராகுல் காந்தியிடம்தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.