×

நேற்று கர்நாடக சறுக்கலில், உத்திர பிரதேச வெற்றியை கொண்டாட தவறி விட்டோமோ?- பாஜக

 

நேற்று கர்நாடக சறுக்கலில், உத்திர பிரதேசத்தில் பெற்ற மகத்தான வெற்றியை கொண்டாட தவறி விட்டோமோ? என தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டரில், “நேற்று கர்நாடக சறுக்கலில், உத்திர பிரதேசத்தில் பெற்ற மகத்தான வெற்றியை கொண்டாட தவறி விட்டோமோ?? 17 மாநகராட்சிகளில் நடைபெற்ற மேயர் தேர்தல்களில் 17-ஐயும் வென்று சாதனை படைத்துள்ளது முதல்வர் யோகி தலைமையிலான பா.ஜ.க.

பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என நான்கு முனை போட்டியில் 17/17 வென்றது அசாதரணமான வெற்றி. அது மட்டுமின்றி நான்கு முனை போட்டியில் நமது வாக்காளர்கள் வாங்கிய வாக்குகள் பிரம்மிக்க வைக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் நமது மேயர் வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள் இந்த படத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் குஜராத் முழுவதும் காவிமயம் ஆனது போல் இன்று உத்திர பிரதேசமும் முழுக்க முழுக்க காவிமயத்தை நோக்கி நகர்கிறது. உத்திர பிரதேச பா.ஜ.க-வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், 2024 பாராளுமன்ற தேர்தலில் உ.பி-யில் 80/80 தொகுதிகளை தட்டித்தூக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.