×

’’இந்த வீட்டைப் பார்த்தாலே சந்தேகம் வருகிறது.. சசிகலா மேல்தான் அந்த சந்தேகம்.. ’’

 

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் சென்னை போயஸ் கார்டனில் உள்ளது.   அவரது மறைவுக்குப் பின்னர் இந்த வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற அதிமுக தரப்பில் முயற்சி நடந்து அது வெற்றிகரமாக நடந்தேறியது.   ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,  அண்ணன் மகன் தீபக் இருவரும் இந்த வேதா இல்லம் தங்களுக்குத்தான் சொந்தம்.  இதை அரசுடமையாக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கின் விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டது.  அதில் ஜெயலலிதா வாழ்ந்த இடமான வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்,  வேதா  இல்லத்தை அரசுடைமை ஆக்கி தமிழ் நாடு அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.  மேலும் மூன்று வாரங்களுக்குள் தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தை  ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

 இதையடுத்து வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா -தீபக் ஆகியோர் மனு அளித்தனர்.  இதையடுத்து போயஸ் கார்டன் வேதா இல்லத்தின்  சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தீபக் மற்றும் தீபக்கிடம்  ஒப்படைத்தார்.   சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதும்   தீபா தனது கணவருடன் வேதா இல்லத்தை சுற்றிப்பார்த்தார்.   ணவருடன் மாடியில் ஏறி நின்று உற்சாகமாகப் கையசைத்தார்.

 இதன் பின்னர் ஜெ. தீபா செய்தியாளர்களிடம் பேசியபோது,    ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்க இருப்பதாக தெரிவித்த்கார்.  அதே நேரம் நிலையத்தை அறக்கட்டளையாக மாற்றும் எண்ணம் இல்லை என்பதையும் தெரிவித்தார்.

 இந்த வீட்டிற்கு  குடி வர வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று தெரிவித்த தீபா,   வீட்டில் பராமரிப்பு பணிகள் உள்ளதால் அதை முடித்த  பின்னரே குடி வரவேண்டும் என்பதை தெரிவித்தார்.

அதிமுகவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று வீட்டின் சாவியை வாங்கியிருக்கிறோம்.  அதிமுக இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் அதையும் சட்டரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

 ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற வேண்டும் . இந்த விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த தீபா,   இந்த வீட்டை பார்த்தாலே எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது.  ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக சசிகலா மீது சந்தேகம் உள்ளது.  அதனால் அவரையும் இந்த வழக்கில் முக்கியமாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.