×

அரசியலில் அண்ணாமலை அநாதையாகத்தான் நிற்க வேண்டும்- எஸ்.வி.சேகர்

 

சமீபகாலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எஸ்.வி.சேகர் இடையே வார்த்தைப்போர் விஸ்வரூபமாகியுள்ளது.

தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள எஸ்.வி.சேகர் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார். அதில், “பாஜகவை காவல்நிலையம் போல நடத்த அண்ணாமலை ஆசைப்படுகிறார். அவர் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். பாஜகவை அழிக்க வந்த ஸ்லீப்பர் செல். எதிராளியின் தலையைச் சீவாமல் உடன் வருபவர்களின் தலையைச் சீவினால் பின்னர் அரசியலில் அவர், அநாதையாகத் தான் நிற்கவேண்டும். கட்சியிலிருந்து என்னைப் பிரச்சாரத்துக்கூட அழைப்பதில்லை. அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை. 

அனைத்து சாதியினருக்கும் தனிதனிக் கட்சி இருக்கிறது. அதுபோல் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கென ஒரு தனிக்கட்சி உருவானால் மகிழ்ச்சியே. அண்ணாமலை பாஜக தலைவரான பின்பு தமிழ்நாட்டில் பாஜக வாக்குவங்கி 4 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக குறைந்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் வரை அண்ணாமலை பாஜக தலைவராக நீடிப்பாரா என்பதே சந்தேகம் தான். பாஜக மாநில தலைவராக வானதி சீனிவாசன் கூட வரலாம். எனக்கு பதவி ஆசை இல்லை. ஒடிசா நிகழ்வை பொறுத்தவரை எதிராபாராமல் நடந்த துயர சம்பவம். இதற்காக ரயில்வேத்துறை அமைச்சரை குறைக்கூற கூடாது. உதயநிதி ஸ்டாலின் ஓடிசாவுக்கு சென்றது பாராட்டதக்கது” என்றார்.