×

அதனால்தான் பாஜகவில் இருந்து வெளியேறினேன்; இதனால்தான் திமுகவில் இணைந்தேன் - சிவபாலன்

 

தமிழக பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வந்தனர்.  இந்த நிலையில் பாஜகவின் தமிழக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன் திமுகவில் இணைந்துள்ளார்.  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

 திமுக இணைந்த பின்னர் அவர் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ,  ‘’சமூகநீதி மதச்சார்பின்மை என்று அனைவருக்குமான பாதையில் பயணிக்கின்றது திமுக.  ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகுகின்றது .  

ஜிஎஸ்டி வருவாயில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இரண்டாம் இடத்தில் உள்ளது.  அதே பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக நிதியை ஒதுக்கி விட்டு தமிழகத்திற்கு குறைவான நிதியை ஒதுக்குகின்றார்கள்.  மேலும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது வெறுப்பு உணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் அரசியல் செய்கிறது பாஜக. 

 மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதை விட்டுவிட்டு மக்களிடையே பிரச்சனைகள் ஏற்படுகின்ற வகையில் பேசி வருகிறார் அண்ணாமலை.  சாதி ,மதம், மாநிலம் ரீதியாக பாஜக தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்துகின்ற வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது . அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். 

 நான் பாஜகவில் 20 ஆண்டுகளாக வேலை செய்து உள்ளேன்.  இளைஞர் அணியின் மாநில செயலாளராகவும் இருந்தேன்.  அண்ணாமலை பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை.  அதனால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி தமிழக அரசின் செயல்பாடுகள் மெச்சும் படி உள்ளதால் , அமைச்சர் மனோ தங்கராஜ் செயல்பாடுகளும் பிடித்திருந்தால் திமுகவில் இணைந்துள்ளேன்’’ என்று கூறியிருக்கிறார்.