×

ஒட்டுமொத்த திமுக ஐடி பிரிவினரையும் சிறையில்  அடைக்கணும்.. அண்ணாமலை ஆத்திரம்
 

 

ஒரு ட்ரோல் வீடியோவை வெளியிடுவதற்கு  கைது நடவடிக்கை என்றால், ஒட்டுமொத்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் சிறையில் இருக்க வேண்டும். ஏனெனில் இதுதானே அவர்களின் முழுநேர தொழில் என்று ஆத்திரப்பட்டிருக்கிறார் அண்ணாமலை.  நள்ளிரவு கைதுகள் மூலம் ஒரு பாசிசவாதியின் உண்மையான குணாதிசயங்கள் கொண்டவராக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் ஆத்திரப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.   இந்த நிதிநிலை அறிக்கையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது என்று அறிவித்தார். 

 தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்று அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர் . தமிழக அரசின் இந்த அறிவிப்பை கிண்டலடிக்கும் விதமாக நடிகர்கள் கவுண்டமணி -செந்தில் நடித்த படத்தின் காமெடி காட்சிகளோடு ஒப்பிட்டு சவுக்கு சங்கரின் ஆதரவாளரும் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற டுவிட்டர் தளத்தில் அக்கவுண்டை வைத்திருக்கும் பிரதீப் வெளியிட்டு இருந்தார்.

அவர்,  ’’ஒரு ட்ரோல் வீடியோவை வெளியிடுவதற்கு  கைது நடவடிக்கை என்றால், ஒட்டுமொத்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் சிறையில் இருக்க வேண்டும். ஏனெனில் இதுதானே அவர்களின் முழுநேர தொழில்’’ என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.  

மேலும்,  ‘’ஒரு சின்ன விமர்சனத்திற்கே அரசு திகைத்து நிற்கிறது.  கருத்து சுதந்திரைத்தை தடுப்பது, நள்ளிரவு கைதுகள் மூலம் ஒரு பாசிசவாதியின் உண்மையான குணாதிசயங்கள் கொண்டவராக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்’’ என்றும் ஆத்திரப்பட்டிருக்கிறார்.

அவர் மேலும்,  ‘’ஒட்டுமொத்த  அதிகாரங்களும் ஒரு குடும்பத்திற்குள் குவிந்தால் ஜனநாயகம் எதேச்சதிகாரமாக மாறி, எந்த நேரத்திலும் சர்வாதிகார அரசாக மாறும்’’ என்றும் எச்சரித்திருக்கிறார்.