×

அந்த 'மை' ரஷ்யாவில் இருந்து வந்தது; தலையில் தடவினால் அழிந்துவிடும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

 

 வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்தது முதல்  வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் மை  அழிந்து விடுகிறது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் அதற்கெல்லாம் பதில் அளித்துள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன் .

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது . இதில் கச்சேரி வீதி சாலையில் இருக்கும் மாநகராட்சி துவக்கிய துவக்க பள்ளியில் மனைவி வரலட்சுமி உடன் சென்று வாக்குப்பதிவு செய்தார் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன்.  அதன் பின்னர் அவரை செய்தியாளர்களை சந்தித்தபோது,  வாக்காளர்களுக்கு பணம் ,பரிசு பொருட்கள் கொடுத்தது,  வாக்குப்பதிவில் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை உடனே அழிந்து விடுகிறது என்று இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார் இளங்கோவன்.

 முதல்வர் மு. க ஸ்டாலின் ஆட்சியின் 21 மாத திட்டங்களை சொல்லி ஓட்டு சேகரித்து இருக்கிறோம்.  ராகுல் காந்தியின் நடைபயணம் இந்த தேர்தலுக்கு வலு சேர்த்து இருக்கிறது . அதனால் தான் பெண்கள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.   இந்த தேர்தலின் வெற்றி தான் அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் வெள்ளோட்டமாக வலு சேர்க்கும் என்று சொன்ன இளங்கோவன்,   என் வெற்றி பிரகாசமாக இருக்கிறது.  ஓட்டு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது .  ஆனால் மிகப் பெரிய வெற்றியாக அமையும் என்றார்.   எதிரணியில் இருக்கும் வேட்பாளர் இதுவரைக்கும் சந்திக்க அதை சொல்லி சந்திப்பார் என்றார்.

 தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு,  தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது . எதிர்க்கட்சி -ஆளும் கட்சி என்கிற பேதம் இல்லாமல் இருதரப்பிலும் உள்ள தேர்தல் அலுவலகங்களையும் மூடினார்கள் .  அனுமதி பெறாமல் இயங்கியதாகச் சொன்னார்கள்.  ஓட்டு போடுபவர்களுக்கு கையில் வைக்கப்படும் மை அழிந்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு,   இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் சொல்லி வருகின்றனர்.  இது காமராஜர் காலத்தில் இருந்து வரும் குற்றச்சாட்டு . அப்போது ரஷ்யாவில் இருந்து அந்த மை வந்ததாகவும் அதை தலையில் தடவினால் அழிந்து விடும் என்றும் கூறினார்கள் . அதே பிரச்சினை தான் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியடைந்தவர்களால் சொல்லப்படும் குற்றச்சாட்டு.  இங்கு இருக்கும் மை பொய்யல்ல மெய்யாகவே உள்ளது என்றார்.

 ஸ்மார்ட் வாட்ச், குக்கர், லேப்டாப் ,புடவை ,கொலுசு என்று வாக்காளர்களுக்கு கொடுத்ததாக இரண்டு கட்சிகள் மீதும் புகார்  கூறப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணையத்திலும் 700க்கும் மேற்பட்ட புகார்கள் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன . ஆனால் இது குறித்த கேள்விக்கு,  இவை எதுவும் ஆதாரம் அற்றவை என்று கூறினார்.

இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ததாக இருந்த குற்றச்சாட்டுகளுக்கு,   அவர்கள் பிரச்சாரத்துக்கு வரவில்லை.  இத்தொகுதியில் உள்ள புகார்களை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை மக்களிடம் கேட்டறிவதற்காக வந்தார்கள் என்று சொல்லி சமாளித்தார் . ஒவ்வொரு துறை அமைச்சர்களும் மக்களை சந்தித்து சென்றிருப்பதால் முதல்வரிடம் இது குறித்து கூறி விரைவில் நல்ல பல திட்டங்கள் இந்த தொகுதிக்கு கிடைக்கும் வகையில் செய்வார்கள் என்று சமாளித்தார். 

 தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் ஈரோட்டில் இருக்க மாட்டீர்கள் சென்னைக்கு சென்று விடுவீர்கள் என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்தது குறித்த கேள்விக்கு, தேர்தலில் நான் வெற்றி பெற்றால் எங்கு இருக்க மாட்டேன் . சென்னையில் தான் இருப்பேன் என்று எதிர்க்கட்சி வேட்பாளர் சொல்லுகிறார்.  இங்கிருந்து கொண்டு அரசியல் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாது . சென்னைக்கு சென்றால்தான் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரைக்கும் அதிகாரிகள் வரை சென்று பார்த்து திட்டங்களை எடுத்துச் சொல்லி செயல்படுத்த முடியும் என்றார்.