×

மோடியையும் காவியையும் எதிர்த்துப் பேச ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை - ஆ.ராசா
 

 


மோடியை எதிர்க்க இந்தியாவில் எந்த தலைவர்களுக்கும் துணிவு இல்லை.  மோடியையும் காவியையும் எதிர்த்துப் பேச தமிழக முதல்வர் ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை என்றார் ஆ. ராசா எம்பி.

 திருவண்ணாமலையில் நடந்த முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில். ஆ ராசா எம்பி பங்கேற்றார்.  அதில் பேசிய ஆராசா,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 60 கோடி ரூபாய் செலவு செய்யும் அதிமுக,  தமிழகத்தையும் தமிழ் மக்கள் மனதிலும் தமிழகத்தை நிமிரச் செய்ய பல்வேறு ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை திட்டமாக போட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கருணாநிதிக்கு 80 கோடியில் பேனா வைப்பதால் என்ன தவறு என்று கேட்ட கேள்வியை எழுப்பினார்.

 பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு முன்னுரிமை அருந்ததியினர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தமிழ் மொழியை செம்மொழியாக ஆக்கிய பெருமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்திட்ட பேனாவிற்கு மெரினாவில் சிலை வைத்தால் குற்றம் சொல்லும் இவர்கள் கலைஞர் எழுதிய அனைத்து இலக்கியங்களும் பாடல்களும் எழுத்துக்களும் இன்றளவும் உள்ளது.

 ஜெயலலிதாவிற்காக ஏதேனும் எழுத்துக்கள் உள்ளதா?பெரியார் கலைஞர் ஆகியோர் இருந்த பொழுது மதம் உச்சத்தில் இல்லை. ஆனால் இன்று மதத்தால் உச்சகட்ட ஆபத்து இருக்கிறது.  ஆபத்தை எதிர்த்து நிற்க இந்தியாவில் மோடியை எதிர்க்க எந்த தலைவருக்கும் துணிச்சல் இல்லை.  மோடியையும் காவியையும் எதிர்த்துப் பேச தமிழக முதல்வர் ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை.

 அண்ணா காலத்திலும் பெரியார் காலத்திலும் ஆர்ஸ்எஸ் பிஜேபியே  இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே காவியை விரட்டி அடித்து விடுவோம் என்கிறார் என குற்றிபிட்டுள்ளார்..