×

அதிமுகவின் அழைப்பை நிராகரித்த விசிக தலைவர் திருமாவளவன்!

 

நாங்கள் திருமாவளவன் அவர்களுக்கு வழிவிட்டு காத்திருக்கிறோம் என்று பேசிய அதிமுக நிர்வாகி இன்பதுரைக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை,  திருமாவளவன் எங்கு செல்வார் என தமிழ்நாடே காத்துக் கொண்டிருக்கிறது. அவர் நம்மோடுதான் இருப்பார், நல்லவர்களோடுதான் இருப்பார்” என்றார்.

இதற்கு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,  “இன்பதுரை பேசியது அரசியல் அழைப்பாக ஏற்கவேண்டாம். தற்போது வரை திமுக கூட்டணியில் தான் உள்ளோம். இவ்வழைப்பு 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கானது. அதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் கிடையாது. விசிக இந்தியா கூட்டணியை விட்டு வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா  கூட்டணியில் தற்போது இருப்பதால், வேறு கூட்டணியை நாங்கள் உருவாக்க தேவையும் இல்லை. மக்களோடு தான் விசிக நிற்கும். இதுதான் இன்பதுரைக்கு நான் அளிக்கும் பதில் தேர்தல் அரசியல் என்றால் கட்சி நலன், காலச்சூழலைக் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” என்றார்.