×

இதுதான் தமிழகத்தின் அரசியல் வரலாறு! அண்ணாமலைக்கு சொல்லும் நயினார் நாகேந்திரன்

 

 அண்ணாமலை இப்படி பேசுவாரா என்று அவருடன் கட்சியில் இருப்பவர்கள் யாருமே கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை.  அந்த அதிர்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.   கட்சிக்குள் இது குறித்து எதுவும் விவாதிக்காமல் திடீரென்று மேடையில் அப்படி பேசியதால் பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை மீது அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.

 கூட்டணிக்காக சமரசம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.  ஆனால் தனித்து நின்றால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளர முடியும்.  கூட்டணி முடிவை எடுத்தால் அதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வலியுறுத்தினால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் ஒரு சாதாரணமாக தொண்டனாக மட்டுமே தொடர்வேன்.   சமரசம் செய்து கட்சியை நடத்த வேண்டும் என்றால்,  கூட்டணி அமைத்து கட்சியை நடத்துவதற்கு இங்கே தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  எந்த நிலையிலும் நான் என்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பேசியது பாஜக தலைவர்களை நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 

அண்ணாமலை இவ்வாறு பேசியதற்கு,  அதே மேடையிலேயே வானத்தில் சீனிவாசன் அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.   அதே பதிலைத் தான் தமிழக பாஜகவில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

பாஜகவுக்கு தனிப்பட்ட நபர்கள் முக்கியமல்ல தேசியமும் நாடும் தான் முக்கியம்.  தேசம் நன்றாக இருப்பதற்காக தேசிய தலைமை என்ன நிலைப்பாடு எடுத்து செயல்பட வலியுறுத்துகிறதோ தலைவர்களும் தொண்டர்களும் முழு மனதோடு அதை ஏற்று செயல்பட வேண்டும் என்று மேடையிலேயே அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்.

அதே போல்,   அண்ணாமலை சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து.  மற்றபடி கூட்டணி குறித்து தலைமை எடுப்பதே இறுதி முடிவு என்றார்  நயினார் நாகேந்திரன்.  தொடர்ந்து அது குறித்து பேசிய நைனார் நாகேந்திரன்,   தமிழகத்தில் எந்த கட்சியின் தனித்து தேர்தலை எதிர்கொண்டது இல்லை காங்கிரஸ்- திமுக,  பாஜக -திமுக, பாஜக -அதிமுக என்று கூட்டணிகள் தொடர்ந்து இருக்கின்றன . இதுதான் தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பதை தெளிவுபடுத்தினார் .

 அதாவது இந்த தெளிவில் பாஜகவினர் அனைவரும் இருக்கிறோம் . அண்ணாமலை மட்டும் இது புரியாமல் தனித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்லாமல் சொன்னார். 

பாஜகவில் நயினார் நாகேந்திரன் அதிருப்தியில் இருப்பதாகவும் கட்சியை விட்டு வெளியேறப் போவதாகவும் தகவல் வருவது குறித்த கேள்விக்கு,  நான் எந்த அதற்கு இடமில்லை என்று மறுப்பு  தெரிவித்தார்.