×

விரைவில் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வார்- டிடிவி தினகரன்

 

தேனி பழனிச்செட்டிபட்டியில் அமமுக சார்பாக செயல்வீரர் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “என்னை சிறைக்கு செல்வேன் என்று சிலர் கூறினார்கள். இன்று யார் சிறைக்கு செல்லப்போகிறார் என்பது உங்களுக்கே தெரியும். தற்போதுள்ள அதிமுக பிஸ்னஸ் கட்சி போல் உள்ளது. அதனால் தான் அன்றே தனிக்கட்சி துவங்கினேன். அதிமுகவில் பதவிக்காக சண்டை வரும்  என்று அன்றே கூறினேன். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை விரைவில் பெறப்போகிறார். விரைவில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் நடத்த இருக்கிறேன்.

பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரக்கூடும் அதற்கான பணிகளை தற்போது இருந்தே துவங்குங்கள். குக்கர் சின்னத்தை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். வருங்கால தேர்தலில் பணம் வேலை செய்யாது. உள்ளாட்சி தேர்தலில் நமது பங்காளிகள் பணம் கொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை என அதிமுகவை மறைமுகமாக சாடினார். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நமது கட்சியில் பொதுக்குழு சென்னையில் நடைபெறும்” என பேசினார்.