×

நாடாளுமன்ற தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து சந்திப்போம்- டிடிவி தினகரன்

 

நாடாளுமன்ற தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து சந்திப்போம்- டிடிடிவி தினகரன்விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்  சட்டமன்றத் தொகுதி ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் சாமி தரிசனம் செய்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். இனிவரும் அனைத்து நிகழ்வுகளிலும் இருவரும் சேர்ந்துதான் பயணிப்போம். ஆனால் நாங்கள் NDA கூட்டணியில் இல்லை. அதனால்தான் நடைபயணத்திற்கு எங்களை அண்ணாமலை அழைக்கவில்லை. அதுகுறித்து அண்ணாமலையிடமே கேளுங்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பர் மாதம் தெரிவிக்கப்படும்.

அண்ணாமலையின் நடைபயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை ஊடகங்கள்தான் கூற வேண்டும். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்பதால் நடைபயணம் மேற்கொள்கிறார். திமுக பைல்ஸ் 2 குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை” என்றார்.