×

அதிமுகவினரிடையே ஒற்றுமையில்லை; கட்சி சீரழிகிறது- டிடிவி தினகரன்

 

கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்தார். 

அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி, ராஜபக்சே போல் செயல்படுகிறார். விரைவில் ராஜபக்சேக்கு நடந்த நிலையை எடப்பாடி பழனிச்சாமிக்கு நிகழும். ஒருபுறம் ஓ பன்னீர் செல்வமும் மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி துரோகிகள்.  அம்மாவால் கட்டிக் காக்கப்பட்ட கழகம் இன்று இவர்கள் கையில் சிக்கி சீரழிகிறது. இதை தற்போது நாங்கள் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடியும். தமிழகத்திற்கு ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்கு தாடியை போல் தேவையில்லாத ஒன்று என அண்ணா கூறியதை தான் நாங்களும் தெரிவிக்கிறோம், திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் அதுதான்.

பொன்னையன் கூறியதை தான், நான் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறேன். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் உள்ளதையே இது காட்டுகிறது. அதிமுகவில் தற்போது அனைவரும் பண மூட்டைகளை வைத்துக் கொண்டிருகின்றனர். அதிமுகவில் உள்ளவர்கள் சகுனி கூட்டம். அம்மாவின் கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.