×

கடந்த 75 ஆண்டுகளாக சட்டப்பிரிவு 370 இருந்தது... ஆனால் ஏன் அமைதி இல்லை?.. அமித் ஷா கேள்வி

 

ஜம்மு அண்டு காஷ்மீரில் கடந்த 75 ஆண்டுகளாக சட்டப்பிரிவு 370 இருந்தது. ஆனால் ஏன் அமைதி இல்லை? என்று மத்திய உள்துறை அமித் ஷா கேள்வி எழுப்பினார்

டெல்லியில் நேற்று இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: (ஜம்மு அண்டு காஷ்மீரில்) கடந்த 75 ஆண்டுகளாக சட்டப்பிரிவு 370 இருந்தது. ஏன் அமைதி இல்லை? அமைதிக்கும், 370வது பிரிவுக்கும் தொடர்பு இருந்தால், 1990ல் சட்டப்பிரிவு இல்லை? 1990ல் இருந்தால் ஏன் அமைதி இல்லை? குறி வைக்கப்பட்ட கொலைகளின் புள்ளிவிவரங்களை சேர்த்தாலும், நாம் பத்து சதவீதத்தை நெருங்கவில்லை. இதன் பொருள் அங்கு அமைதி நிலவுகிறது. 


எல்லை நிர்ணய செயல்முறை முடிந்தவுடன் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். வேறுவிதமாக கூறுபவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 2014க்கு முன்பு இந்தியாவின் கொள்கை முடக்கம் என்ற நிலையில் இருந்தது, இது நாட்டின் கௌரவத்தை பாதித்தது. 2014க்கு பிறகு இந்தியா நிலையான ஆட்சியை கண்டது. பிரதமர் மோடி பொறுமையுடனும் திட்டமிடலுடனும் பல பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த சட்டபிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரசேதங்களாக பிரித்தது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.