×

மகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் உத்தரகாண்ட் அமைச்சர்.. கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கிய பா.ஜ.க.
 

 

உத்தரகாண்டில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனது மகளுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்த அம்மாநில அமைச்சரை, அமைச்சரவையிலிருந்து நீக்கியதோடு, கட்சியிலிருந்தும் 6 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.. நீக்கியுள்ளது.

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த ஹரக் சிங் ராவத்தை அமைச்சரவை குழுவிலிருந்து நேற்று முன்தினம் பா.ஜ.க. அதிரடியாக நீக்கியது. மேலும் கட்சியிலிருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனது மகளுக்கு சீட் கேட்டதால் ஹரக் சிங் ராவத் பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இது  தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி வளர்ச்சி, தேசியவாதம் மற்றும் வம்ச அரசியலில் இருந்து விலகிய பாதையை பின்பற்றுகிறது. அனைவரின் ஒத்துழைப்பும், அனைவரின் வளர்ச்சியும், அனைவரின் நம்பிக்கையும், அனைவரின் முயற்சியும் என்ற மந்திரத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். அவர் சில சமயங்களில் இது போன்ற கருத்துக்களை கூறியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் நாங்கள் அவற்றை கண்டு கொள்ளாமல் விட்டோம். 

ஹரக் சிங் ராவத் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சி சீட்டு கோரினார். தேர்தலில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சியிலிருந்து டிக்கெட் வழங்கப்படும். கட்சியின் இந்த முடிவால், கட்சிக்குள் உட்கட்சி மோதல் போன்ற எதுவும் நடக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.