×

டிடிவி தினகரனுடன் இணைகிறாரா ஓ.பி.எஸ்? - வைத்திலிங்கம் பதில்

 

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “ஓ.பி.எஸ். தரப்பில் நியமிக்கப்பட்ட பாண்டிச்சேரி, திருச்சி, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்கள் ஓ.பி.எஸ்-ஐ  சந்தித்து வாழ்த்து பெற்றனர். தேவைப்படும் போது பொதுக்குழு கூட்டப்படும். 80% சதவீதம் பேர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தினந்தோறும் ஆதரவு பெறுகி கொண்டிருக்கிறது. கூடுதல் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்” எனக் கூறினார். 

முன்னதாக ஓபிஎஸ்க்கு டி.டி.வி.தினகரன் ஆதரவாக பேசி வருகிறார் அவரோடு சேர வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் கட்சி எடுக்கும் முடிவே இறுதியானது. எம்ஜிஆர் அவர்கள் வகுத்த விதிகளை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுவை எடப்பாடி அணியினர் நடத்தியுள்ளனர். அதை எதிர்த்து கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் மாபெரும் சுற்றுபயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்றார்.