×

தொண்டர்கள் விருப்பதை நிறைவேற்றவில்லையெனில் ஈபிஎஸ் அனாதையாகிவிடுவார்- வைத்திலிங்கம்

 

எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான  உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தங்கமகன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். 

அதன்பின் சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், “தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொண்டு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தவர் ஓ. பன்னீர் செல்வம். ஆகவே ஓ பன்னீர் செல்வம் பின் நின்று, ராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில் போல் நானும் உதவியாக இருப்பேன்.மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் திமுகவை அகற்ற அதிமுக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்” எனக் கூறினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், கட்சிக்கு உழைக்க வில்லை என்றால், ஓ.பன்னீர் செல்வத்தை, ஜெயலலிதா எப்படி முதலமைச்சராக்கினார் என எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறினார். மேலும், ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றால்
எடப்பாடி  பழனிச்சாமி அரசியலில் அனாதையாகி விடுவார்” எனக் கூறினார்.

அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி மாறி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.