×

“ஒற்றை தலைமை விவகாரம்- நத்தம் விஸ்வாதனை வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்தார்”

 

நாமக்கல் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ‌ தங்கமணி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், “அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் ஒற்றைத்தலைமை வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என அனைவரும் தெரிவித்தனர். ஆனால் ஓபிஎஸ் அதனை ஏற்க மறுத்து விட்டார். ஒபிஎஸ் இடம் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசும் போது வைத்திலிங்கம், அதிமுக ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக வைத்திலிங்கம் செயல்பட்டார். ஒற்றைத் தலைமை வேண்டும் என பேச்சுவார்த்தை நடக்கும் போதே நெருங்கிய நண்பரான நத்தம் விஸ்வாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தார். 


அதிமுக சார்பில் 23 ம் தேதி நடைபெற்ற  பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுக்கலாம் என நினைத்து ஓபன்னீர்செல்வத்திடம் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே நீதிமன்றத்திற்கு சென்று தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என தடை வாங்கி விட்டார் ஓபிஎஸ். உச்சநீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த கூடாது என தடை ஆணை வாங்கியதாக கூறி தவறான செய்தியை ஓபிஎஸ் பரப்புகிறார். விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக ஆவார். இதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.