எங்கே தப்பிக்கப் பார்க்கிறாய்? அமெரிக்காவா? அண்ணாமலையை கேட்கும் காயத்ரி

 
gt

 திமுக அண்ணாமலைக்கு  கெடு விதித்து எச்சரிக்கை விடுத்ததற்கு பதிலுக்கு திமுகவுக்கு கெடு விதித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அண்ணாமலை.

திமுக பைல்ஸ் என்கிற தலைப்பில் திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின்,  அவரது மருமகன் சபரீசன்,  அவரது சகோதரியும் திமுக எம்பியுமான கனிமொழி உள்ளிட்ட திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .  தனது பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.  உங்கள் சமூக ஊடக பக்கங்கள் , இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவினை நீக்க வேண்டும்.  இழப்பீடு தொகையாக கட்சிக்காரருக்கு ரூ.500,00,00,000 வழங்க வேண்டும்.  எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். 

gaa

 இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்திற்குள் இவற்றை செய்ய தவறினால் உங்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார் என்று அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.  

இதற்கு அண்ணாமலை, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய்  நான் பெற்றுக் கொண்டதாக ஆதாரம் அற்ற பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தி இருக்கிறார் ஆர் எஸ் பாரதி.    என் மீதும் பாஜக கட்சியின் மீதும் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்காக 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன்.  இதை நான் பி .எம். கேர் நிதிக்கு செலுத்த விரும்புகிறேன் என்று பதிலுக்கு பதில் அறிவித்திருக்கிறார்.   அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும் என் கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரம் மற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க விட்டால் ஆர். எஸ். பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருக்கிறார் அண்ணாமலை.

இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம்,   ’’திமுக, அண்ணாமலையை விட்டுடாதிங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள். அந்த ₹500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள்.  அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார். 

திமுக அவதூறு வழக்கு தொடர்ந்து அண்ணாமலை அந்த ₹500 கோடியை PM Cares நிதிக்கு கொடுப்பாராம்.  இது என்ன நியாயம்? இது என்ன போங்கு? PM Cares நிதியை எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேலி செய்கிறது & மோசடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இப்போ அண்ணாமலை PM Cares நிதியை தேவையில்லாமல் இழுத்து வருகிறார். பித்தலாட்டம் அண்ணாமலை’’ என்கிறார்.

அவர் மேலும்,  ‘’ஆருத்ரா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள்.பிறகு எங்கே தப்பிக்கப் பார்க்கிறாய்? அமெரிக்காவா? அண்ணாமலை, பிரதமரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அண்ணாமலையின் பித்தலாட்டம் முட்டாள்தனத்தை காப்பாற்றுவது பிரதமரின் வேலையா? பிஜேபியின் முக்கிய தலைவர்களின் பெயர்களை விருப்பப்படி பயன்படுத்தி பிரதமர் பெயர் விருப்பப்படி பயன்படுத்தி தப்பிப்பதா?பாஜக தேசிய கட்சி என்பதை அண்ணாமலை மறந்துவிட்டார். அவர் தனது தனிப்பட்ட குழப்பத்திற்காக மத்திய அலுவலகத்தையோ பிரதமரையோ இழுக்க முடியாது’’ என்கிறார்.