×

உதயநிதி ஏன் தொழிலதிபர் காலில் விழுந்தார்? விளாசும் மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் 

 

தமிழக தேர்தல் வரலாற்றில் அதிலும் குறிப்பாக இடைத்தேர்தல் வரலாற்றில் திருமங்கலம் ஃபார்முலா தான் பெரிய அளவில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.  அந்த திருமங்கலம் ஃபார்முலாவையும் ஈரோடு இடைத்தேர்தல் ஃபார்முலா மிஞ்சி விட்டது என்கிறார் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் .

சேலம் நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்.   ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணி குறித்து இருவரும் நீண்ட நேரம் பேசினர்.   அதன் பின்னர் வைகைச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 அப்போது அவர்,  ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  அதன் மூலம் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும்.  இதன் மூலமாக வேட்பாளர்  தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.  ஆனால் ஒட்டுமொத்தமாக வாக்காளர்களை ஒரு இடத்தில் ஆடு பட்டியில் அடைப்பது போல் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.   திமுகவினர் ஒரே இடத்தில் அமர வைத்து துணிவு, வாரிசு போன்ற படங்களை காட்டி மாலையில் அனுப்பி வைக்கிறார்கள்.   சாப்பாட்டையும் கொடுத்து அனுப்புகிறார்கள்.

 இது புது பார்முலாவாக இருக்கிறது.   இது போன்ற ஃபார்முலாவை செய்து வருகிறது.  திருமங்கலம் ஃபார்முலா தான் இப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.   இதற்கு முன்பு திருமங்கலம் ஃபார்முலா தான் இந்தியா முழுவதும் பேசப்பட்டது.   உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் கூட இடைத்தேர்தல் வந்தாலும் திருமங்கலம் ஃபார்முலா தான் பேசப்பட்டது.   ஆனால் தற்போது ஈரோடு கிழக்கு ஃபார்முலா அதை மிஞ்சிவிட்டஹு.

 திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சி விட்டது .  சாமியான ஃபார்முலா தான் ஈரோட்டில் நடக்கிறது.   திராவிட மாடர்ன் ஆட்சி என்றால் இனி சொல்லாமல் சாமியானா மாடல் ஆட்சி என்று  சொல்வார்கள்.  அந்த அளவிற்கு ஈரோட்டில் திமுகவினர் நடத்திக் கொள்கிறார்கள் என்றார்.

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தது குறித்த கேள்விக்கு,   உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வந்தார்.   இப்போது அமைச்சரான பின்னரும் அதிகமாக விமர்சிக்கிறார்.   அவர் வயது என்ன எடப்பாடி பழனிச்சாமி வயது என்ன அவர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.   இல்லையென்றால் அடுத்த கட்டத்தில் இருக்கக்கூடிய தலைவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். 

 செங்கல்லை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துகிறார் உதயநிதி ஸ்டாலின்.  உண்மைக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் எதிராக இருக்கும் திமுகவிற்கு ஓட்டு கேட்கும் உதயநிதி ஸ்டாலின் தான் வெட்கப்பட வேண்டும் என்ற வைகைச் செல்வன்,   ஊர்ந்து வந்தார் தவழ்ந்து வந்தார் என்றும் பதவி பெற்றார் என்றும் கூறுகிறார் உதயநிதி ஸ்டாலின்.   கவர்னர் மாளிகையில் ராஜ் பவனில் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சரின் நண்பரின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் வணங்கினார்.  தொழிலதிபர் காலில் ஒரு அமைச்சர் ஏன் விழுந்தார்.   இதற்கு விளக்கத்தை உதயநிதி ஸ்டாலின் விளக்கம் சொல்ல வேண்டும் என்றார்.