×

டெல்லியில் அண்ணாமலை அழுதாரா?  கொங்கு பெல்ட் பற்றி பேச முதலில் உங்க இடுப்பு பெல்ட் சரியா இருக்குதா பாருங்க என்று சிரித்தார்களா?

 

டெல்லியில் நீ அழுத பிறகு , டேய் பச்சா போய் உன் வேலையைப் பார் என்று ஜி உன்னிடம் சொல்லிவிட்டாராமே. இனிமேல் உன் பருப்பு இங்கே வேகாது. இனி உன் கோமாளி அரசியலை நிறுத்துங்கள்.

டெல்லி உன்னை பார்த்து சிரித்தது.... நீ வெறும் காலி பாத்திரம் என்று.   நீ நம்பர் 1 டகால்டி என்று அனைவருக்கும் தெரியவந்தது. ஸ்டிங் ஆபரேஷன் 1 கிராம் தங்கம், அமர் பிரசாத் ரெட்டியின் 6 லட்சம் கோடி, மோடி கபடி லீக் வசூல், கே.டி.ஆர் ஹனி ட்ராப், மற்றவர்களை இழிவுபடுத்த யூடியூப்காரர்களுக்கு நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள், உன்னாலே பல தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேறினர், குண்டர்களின் உதவியுடன் பாஜக தலைவர்களை முடிக்க உங்கள் அடுத்த இலக்கு எல்லாம் இப்போது அம்பலமானது என்கிறார் நடிகை காயத்ரி ரகுராம். 

அவர் மேலும், சசிகலா அம்மா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை வைத்து அதிமுகவை உடைத்து பின்னர் நீங்கள் கொங்கு பெல்ட் தலைவராக ஆக முடியும் என்று உங்கள் உத்தி சொன்ன பிறகு, டெல்லி ஜி உங்களிடம்,  உங்கள் இடுப்பு பெல்ட்டை முதலில் சரியாக அணியுமாறு உங்களிடம் சொல்லிவிட்டாராமே? என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தால் திமுகவை எதிர்ப்பதற்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறது பாஜக.  இந்த முடிவுக்கு சசிகலா, ஓபிஎஸ் , தினகரன் 3 பேரும் சம்மதம் தெரிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பிடிவாதமாக இருக்கிறார்.  ஓபிஎஸ், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை ஒருங்கிணைத்துவிட்டு அதிமுகவுக்கு தான் பொதுச் செயலாளராக இருக்கலாம் என்று நினைக்கும் சசிகலாவின் கனவையும் பலிக்க விடாமல் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சசிகலா ஓபிஎஸ் ,டிடிவி , தினகரன் 3 பேரும் இணைந்து புதிய அணியை உருவாக்குவார்கள் என்றும்,  பாஜக தலைமையுடன் அந்த கூட்டணி அமையும் என்றும் தகவல் பரவுகின்றன. டெல்லி சென்ற அண்ணாமலை கூட,   எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் இனி கூட்டணி வைக்க தேவையே இல்லை என்பதை வலியுறுத்தி இருக்கிறார். 

இந்த நிலையில்தான் காயத்ரி ரகுராம் மேற்கண்டாவாறு கமெண்ட் அடித்திருக்கிறார்.