பாஜக ஆட்சியை இழக்கிறதா? காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறதா? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்
தேர்தலுக்கு முந்தைய கணிப்பு கருத்துக்கணிப்பு முடிவுகளைப் போலவே கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் மாறி மாறி வருகின்றன . பாஜக , காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது. இழுபறி நிலவும் என்று தெரிகிறது . ஆட்சி அமைப்பதற்கு தேவையான 113 இடங்கள் என்கிற பெரும்பான்மை இரண்டு கட்சிகளுக்குமே கிடைக்காது என்று தெரிய வந்திருக்கிறது யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று தெரிய வந்திருக்கின்றன. அதே நேரம் பெரும்பான்மையான முடிவுகள் காங்கிரசுக்கே சாதகமாக இருக்கின்றன. இதனால் பாஜக ஆட்சியை இழக்கிறதா? என்ற பரபரப்பு கர்நாடக மாநில அரசியலில் எழுந்திருக்கிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. மொத்த 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தலாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . வாக்குப்பதிவுக்காக கர்நாடக மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தேர்தலில் 5,31, 33,054 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 75% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்பிலும் , ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்கிற தீவிரத்தில் காங்கிரசும் , அதே போல் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி இருந்தன.வாக்கு பதிவு இன்று நடைபெற்றிருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. சி ஓட்டர், நியூஸ் நேசன் , ரிபப்ளிக் டிவி, ஜீ நியூஸ், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, டிவி 9 தொலைக்காட்சி, ஏசியாநெட் தொலைக்காட்சி, ஜி மேட்ரிக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகளை வைத்து பார்த்தால் காங்கிரசுக்கே சாதகமாக அமைகிறது.
சி ஓட்டர் கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 103 முதல் 118 இடங்களும் பாஜகவுக்கு 79 முதல் 94 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது. ஜி மெட்ரிக்ஸ் காங்கிரசுக்கு 103 முதல் 118 இடங்களும் பாஜகவுக்கு 79 முதல் 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
டைம்ஸ் நவ் வெளியிட்டு இருக்கும் கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 86 இடங்களும் பாஜக 114 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சியில் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 94 முதல் 108 இடங்களும் பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது . அதேபோல் டிவி 9 தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு 99 முதல் 109 இடங்களிலும் இடங்களும் பாஜகவுக்கு 88 முதல் 98 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது .
சி ஓட்டர் கருத்து கணிப்பு முடிவுகளில் காங்கிரசுக்கு 100 முதல் 112 இடங்களும் பாஜகவுக்கு 83 முதல் 95 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது. நியூஸ் நேசன் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு 86 இடங்களும் பாஜகவுக்கு 114 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது . ஜீ நியூஸ் கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு 103 முதல் 118 இடங்களும் பாஜகவுக்கு 79 முதல் 94 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.