×

2ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்; 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு!

தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு ஏற்பாடு செய்தது. தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்ட நிலையில், 28
 

தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு ஏற்பாடு செய்தது. தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்ட நிலையில், 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்தது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது வாரமாக மெகா கொரனோ தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சுமார் 20 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ள முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணி வரை நடக்கும் முகாமில் பணிகளில் வருவாய், உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் அனைவரும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி கொள்பவர்களுக்கு பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டுமே 1,600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் இடங்கள் குறித்து சென்னை கார்ப்பரேஷன் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.