×

கருப்பு பூஞ்சை நோய்… தமிழகத்தில் ஒரே நாளில் 3 பேர் பலி!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இன்று ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டதை சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ்(49). சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தொற்றில் இருந்து மீண்டு சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சுரேஷுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
 

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இன்று ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டதை சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ்(49). சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தொற்றில் இருந்து மீண்டு சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சுரேஷுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவ பரிசோதனையில் சுரேஷுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததால், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். குமரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை காரணமாக மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர்.

இதேபோல், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சோபியா என்பவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டத்தில், கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் கருப்பணம்பட்டி பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் கருப்புபூஞ்சை நோய் தாக்குதல் காரணமாக இன்று உயிரிழந்தார்.