×

சட்டப்பேரவையில் வரிசைக் கட்டிக் கொண்டு… உதயநிதிக்கு வணக்கம் சொன்ன திமுக எம்.எல்.ஏக்கள்!

தமிழக சட்டப்பேரவைக்கு சென்ற திமுக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் கூறினர். அந்த புகைப்படங்கள் இணைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தொடரில் முதன்முறையாக டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்த திமுக அரசு, மேசைக் கணினி அமைத்து எம்.எல்.ஏக்கள் பட்ஜெட்டை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தது. சபாநாயகர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கிய உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு
 

தமிழக சட்டப்பேரவைக்கு சென்ற திமுக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் கூறினர். அந்த புகைப்படங்கள் இணைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தொடரில் முதன்முறையாக டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்த திமுக அரசு, மேசைக் கணினி அமைத்து எம்.எல்.ஏக்கள் பட்ஜெட்டை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தது. சபாநாயகர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கிய உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என கூறி வந்த எதிர்க்கட்சிகள் வாயடைக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருந்தது. மக்களுக்காக ஏராளாமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அரசின் துறைகளையும் திட்டங்களையும் மேம்படுத்தவும் சீரமைக்கவும் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 மணி நேர பட்ஜெட் உரையை பழனிவேல் தியாகராஜன் முடித்ததும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள் சில இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் ஸ்டாலினின் மகனும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் வைத்த புகைப்படங்கள் தான் அவை. உதயநிதியும் இருக்கையில் அமர்ந்த படியே பதில் வணக்கம் கூறியிருக்கிறார். உதயநிதி அமர்ந்திருக்கும் ஒரு இருக்கைக்கு முன் தான் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார். அவர் இருக்கும் போது திமுக எம்.எல்.ஏக்கள் உதயநிதிக்கு வணக்கம் வைத்ததை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.