வராக நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வராக நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் வராக நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின்
Sep 12, 2020, 09:00 IST
வராக நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.
அந்த வகையில் தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் வராக நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் காலை நிலவரப்படி 120 .28 அடியை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.