×

விளக்கு திரியில் உள்ள ரகசியம்!

தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அதனால்தான், புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது ஒரு பெண், தன் வீட்டிலிருந்து மகாலட்சுமி விளக்கை கொண்டு செல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது. விளக்கு ஏற்றும்போது, மனதில் வேண்டிக்கொள்ளலாமே தவிர, எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது என்பார்கள். விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிவிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
 

தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அதனால்தான், புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது ஒரு பெண், தன் வீட்டிலிருந்து மகாலட்சுமி விளக்கை கொண்டு செல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது. விளக்கு ஏற்றும்போது, மனதில் வேண்டிக்கொள்ளலாமே தவிர, எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது என்பார்கள்.

விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிவிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். குறிப்பாக, இரண்டு திரிகளை ஒன்றாக்கி விளக்கேற்றுவது மிகவும் விசேஷம்.

கணவன் ஒரு திரி, மனைவி மற்றொரு திரி. இப்படி இரண்டு திரிகளை இணைத்து விளக்கேற்றினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம். புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.
தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது அது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது. அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந் தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.