எம்.எஸ்.தோனி அடுத்த சீசனில் நிச்சயமாக விளையாடுவார் - பிராவோ தகவல்!
எம்.எஸ்.தோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் நிச்சயமாக விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ கூறியுள்ளார்.
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ளது. இதில் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறவுள்ள இரண்டாது தகுதி சுற்று போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடம் மோதும். இதனிடையே சென்னை அணியின் கேப்டன் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு கடந்த போட்டியின் போது எம்.எஸ்.தோனி பதிலளித்தார். வர்ணனையாளர் ஒருவர் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த தோனி, அடுத்த சீசன் குறித்து முடிவு எடுக்க இன்னும் பல மாதங்கள் உள்ளன. அது குறித்து இப்போது முடிவு செய்ய வேண்டாம். நான் எப்போது சென்னை அணிக்காக இருப்பேன் என கூறினார்.
இந்த நிலையில், எம்.எஸ்.தோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் நிச்சயமாக விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; தோனி அடுத்த சீசனில் 100 சதவீதம் விளையாடுவார். குறிப்பாக இம்பேக்ட் விதி அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும். ரகானேவும், சிவம் துபேவும் அணிக்கு வலிமை சேர்ப்பதால், தோனியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது தோனிக்கு தெரியும். இவ்வாறு கூறினார்.