×

பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்

 

மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்றார். மேலும் அதே பிரிவில் மோனா அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.

இவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் அவனி லெகரா அவர்களுக்கும் அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் மோனா அகர்வால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இந்திய வீராங்கனைகள் அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.