×

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் போட்டி நாளை தொடரும்

 

ஆசியக் கோப்பை மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் என்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்‌ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்ற போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் விரைவில் ஆட்டமிழக்க செய்தனர்.இதனால் பாபர் அசாம்‌ இந்த ஆட்டத்திலும் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக ஆடினார். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் சாஹின் அப்ரிடி பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசினர். அதிரடியாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்தனர். ரோகித் 56 ரன்களிலும்,கில் 58 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். இதன் பின்னர் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஜோடி நிதானமாக ஆடத் தொடங்கினர்.24.1 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது இருந்தபோது போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்தில் மழை நின்று ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்க பட்ட  நிலையில் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதால் ஆட்டத்தை தொடரவில்லை முடியவில்லை. ஒரு வழியாக மைதானத்தின் ஈரப்பதம் நீக்கப்பட்டு ஆட்டம் 9 மணிக்கு தொடங்கும் 34 ஓவர்கள் கொண்ட போட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன் மழை மீண்டும் தொடங்கியது.

அதனால் "ரிசர்வ் டே"வான நாளை ஆட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். மேலும் நாளை மறுநாளும் இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளதால் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆட்டம் நடைபெற உள்ளது. ஆனால் நாளைய ஆட்டமும் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கை தெரிவிக்கின்றன. இந்த ஆசிய கோப்பை முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.