×

இந்தியா - வங்கதேச டெஸ்ட் தொடர் : சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த இந்திய நட்சத்திர வீரர்கள்

 


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷாண்டோ  தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி,  2 டெஸ்ட் தொடர்கள் மற்றும் 3  டி20  போட்டிகளில் ஆட உள்ளது. அதில் முதலாவதாக டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் நிலையில், முதல் டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில்  சென்னையில் இன்று இந்தியா, வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டியைக் காண சேப்பாக்கம் மைதானத்தில் அதிகாலை முதலே காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கி சென்றனர். காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், காலை 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியது. F,G,H UPPER STAND டிக்கெட்டுகள் ரூ. 200க்கும்,   I,J,K LOWER SATAND டிக்கெட்டுகள் ரூபாய் 400க்கும் விற்கப்பட்டன. இந்த டிக்கெட்டுகள்  வாலாஜா சாலையில் உள்ள 11ம் வாயிலில் வழங்கப்பட்டது.  இதேபோல் விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் அமைந்துள்ள  1ம் வாயிலில் KMK TERRACE டிக்கெட்டுகள் ரூபாய் 1000க்கு விற்கப்பட்டது.  

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டதும், வங்கதேச அணி டாஸ் வென்றது.  கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச வீரர் மமுத்  3 விக்கெட்டுகளை வீழ்த்தி  அசத்தியுள்ளார்.