×

8-வது ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

 

கடந்த இரண்டு வாரங்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இலங்கை அணி கேப்டன் தசுன் சானக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தின் முதல் ஓவரிலே இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா குசால் பெரராவை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.அதன் பிறகு  சிராஜ் பந்துவீச்சை இலங்கை பேட்ஸ்மேன்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் 4வது ஓவரில் மட்டும் நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் சிராஜ்.15.2 ஓவரில் இலங்கை  அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்களை மட்டுமே எடுத்தது. ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி விக்கெட் ஏவும் இழக்காமல் 6.1 ஓவரில் வெற்றி பெற்றது. கில் 27 ரன்களுடனும்,இசான் கிஷன் 21 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது.