IPL 2025- போராடி தோற்ற ராஜஸ்தான்... 44 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி

 
வ்ப்ப்

நடப்பு ஐபிஎல் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.

க்ஹ்ஹ்
முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் மற்றும் ஹெட் ஆகியோர் அதிரடியாக ஆடினார். அதிரடியாக துவக்கிய அபிஷேக் 11 பந்துகளில் 24 ரன்களில் ஆட்டம் இழந்தார். 
அடுத்து வந்த இஷாந் கிசன் டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய ஹெட் 31 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 45 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். பின்னர் வந்த கிளாசன் 34 ரன்களிலும்,நிதிஷ் ரெட்டி 30 ரன்களிலும்  ஆட்டமிழந்தனர்.20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 286 ரன்கள் எடுத்து இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன்னால் இதே ஹைதராபாத் அணி கடந்த வருடம் பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததே ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.

287 என்ற இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ஜெய்ஸ்வால்,பராக், ராணா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்‌. இதன் பிறகு சஞ்சு சம்சன் மற்றும் துருவ் ஜுரல் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.சாம்சன் 66 ரன்னிலும், ஜுரல் 70 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு வந்த ஹூபம் மற்றும் ஹெட்மயர் ஆகியோரும் அதிரடியாக ஆடினார். இருப்பினும் 287 என்ற கடின இலக்கை எட்ட போதுமானதாக இல்லை.20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.