ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2019 முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், ஜனவரி 2021 முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, டிசம்பர் 1, 2024 அன்று பிசிசி தலைவராகவும் பதவியேற்கவுள்ளார்.
தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டாம் என்று முடிவு செய்த ஐசிசி, ஜெய் ஷாவை தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தது. அவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டதை பணிவுடன் ஏற்கிறேன்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன். கிரிக்கெட்டை உலகமயமாக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன்." என்று ஜெய் ஷா கூறினார்.