×

52 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி அணி சாதனை

 

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கல பதக்கம் வென்றது. இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.


பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் நான்காவது முறையாக இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளது. முன்னர் 1968,1972,2020, ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது. ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி இதுவரை 8 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துடன் விடை பெறுகிறார். தொடர்ந்து 4 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி, 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று கொடுத்து இன்றைய போட்டியிடன் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றார்.

52 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெண்கலம் வென்றது.