பாரிஸ் ஒலிம்பிக்- வில்வித்தையில் கலக்கும் இந்திய மகளிர் அணி
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை(26ம் தேதி) ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக துவங்குகிறது. இந்நிலையில் பாரிஸில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான தகுதி சுற்று இன்று துவங்கியது.
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டிக்கான மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற அங்கிதா பகத். மகளிர் ஒற்றையர் வில்வித்தை பிரிவின் ரேங்கிங் சுற்றில் 666 புள்ளிகளுடன் 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். பஜன் கவுர் 22 வது இடத்தையும், தீபிகா குமாரி 23வது இடத்தை பிடித்தனர். புள்ளிகளின் அடிப்படையில் 1983 புள்ளிகளுடன் இந்திய மகளிர் அணி 4ம் இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் இந்திய அணி, பிரான்ஸ் அல்லது நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளும்.
ஒரு வில்வித்தை தொடரின் ரேங்கிங் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் தென்கொரியாவின் லிம் சிஹியோன். 720 புள்ளிகளுக்கு 694 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு உலக வில்வித்தை சாம்பியன்சிப்பில் தென்கொரியாவின் காங் சேயோங் 692 புள்ளிகள் பெற்றதே சாதனையாக இருந்தது.