×

"தலைமுறைகள் போற்றப்படும் சாதனை"- இந்திய ஹாக்கி அணிக்கு மோடி பாராட்டு

 

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ள ஹாக்கி அணியின் சாதனை தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் ஒரு சாதனை. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த வெற்றி இளைஞர்களிடையே விளையாட்டை மேலும் பிரபலமாக்கும். மகத்தான துணிச்சலையும் நெகிழ்ச்சியையும் காட்டிய இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.