×

ஒலிம்பிக்: ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

 

2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மனு பாக்கர்.

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர். ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் 5 ஆவது பதக்கம் கிடைத்துள்ளது. . நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும். இந்த போட்டியில் தென் கொரிய வீராங்கனைகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர்.

மனு பாக்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “"வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் (#ParisOlympics2024!) இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு ( @realmanubhaker )  வாழ்த்துகள். வெண்கலம் வென்றதற்குப் பாராட்டுகள். இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை மனுபாக்கர் பெற்றுள்ளார். அபாரமான  சாதனை! #Cheer4Bharat"” எனக் குறிப்பிட்டுள்ளார்.