×

ஐபிஎல் 2024- பென் ஸ்டோக்ஸ் உட்பட 8 வீரர்கள் விடுவித்தது சென்னை அணி

 

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான அணிகள் தங்களின் தக்கவைக்கபடும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று இறுதிநாள் என ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தங்களின் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை அணியின் எதிர்கால கேப்டனாக கருதப்பட்ட பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவர் 2024 ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பதால் சிஎஸ்கே அணி இவரை வெளியேற்றி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்த அம்பத்தி ராயுடு வையும் விடுவித்துள்ளது சென்னை அணி நிர்வாகம். கடந்த ஆண்டு சிறப்பாக செயல்படாத டுவைன் பிரிடோரியஸ் விடுவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு பட்டியல் :

பென் ஸ்டோக்ஸ், பிரிடோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதி, அம்பத்தி ராயுடு, ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகியோர் விடுவிப்பு