×

ஆர்சிபிக்கு கண்டிப்பா கோப்பைய வாங்கி குடுப்பேன் – மேக்ஸ்வெல் போட்ட முதல் பதிவு!

ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான ஏலம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் பெரிய விலைக்குப் போகும் மேக்ஸ்வெல் இன்றும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது. சிஎஸ்கேவுடன் சமர் புரிந்து அவரை வாங்கி பைக்குள் போட்டது ஆர்சிபி அணி நிர்வாகம். ஒவ்வொரு வருடமும் கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்கி கனவோடே ஆர்சிபி அணி வீட்டுக்குத் திரும்பிவிடும். அவர்களிடம் நல்ல வீரர்கள் பலர் இருந்தாலும் கோப்பையை வெல்வது குதிரைக் கொம்பாகவே
 

ஐபிஎல் 14ஆவது சீசனுக்கான ஏலம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் பெரிய விலைக்குப் போகும் மேக்ஸ்வெல் இன்றும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது. சிஎஸ்கேவுடன் சமர் புரிந்து அவரை வாங்கி பைக்குள் போட்டது ஆர்சிபி அணி நிர்வாகம்.

ஒவ்வொரு வருடமும் கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்கி கனவோடே ஆர்சிபி அணி வீட்டுக்குத் திரும்பிவிடும். அவர்களிடம் நல்ல வீரர்கள் பலர் இருந்தாலும் கோப்பையை வெல்வது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. சென்ற சீசனில் பிளேஆப் வரை வந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் ஊர் திரும்பினர்.

தற்போது ஆர்சிபியால் வாங்கப்பட்டிருக்கும் மேக்ஸ்வெல், ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல தன்னால் முடிந்த பங்களிப்பை நிச்சயம் வழங்குவேன் என்று ட்வீட் செய்துள்ளார். குறிப்பாக, கோப்பையை வாங்கி கொடுக்க தாமதிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்வீட் ஆர்சிபி ரசிகர்களிடையே உற்சாகத்தை எழுப்பியுள்ளது.

இருப்பினும், ஒவ்வொரு ஏலத்திலும் பெரிய விலைக்குப் போய் அந்த அணிக்காகத் துரும்பைக் கூட எடுக்காமல் தான் மேக்ஸ்வெல் இருந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அணிக்கும் கோப்பையை வாங்கி கொடுப்பேன் என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையும் ஆர்சிபி ரசிகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.