×

இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ முடி அகற்றம்! அதிர வைக்கும் பகீர் பின்னணி

 

புதுச்சேரியிலுள்ள ஜெம் மருத்துவமனைக்கு 17 வயதுடைய இளம் பெண் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர் இரண்டு மாதங்களாக வயிற்று வலி, குமட்டல் வாந்தியால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடை,  தலைமுடி அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்டது.

அதை தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சை தொடர்பாக குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் சசிகுமார் செய்தியாளர்களிடம்  பேசுகையில், இளம்பெண்ணின் ஆரம்ப நோய் அறிதல் சோதனையில் வயிற்றுக்குள் ஒரு பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அது தலை முடி இருப்பது கண்டறியப்பட்டது.‌ வயிற்றில் இருந்த முடி பந்தால் நோயாளி செரிமான அமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. வயிற்றில் இருந்து திசுக்களுக்கு சேதத்தை குறைத்து முடி பந்தை பிரித்து எடுத்தோம். சுமார் 1.5 கிலோ அளவுக்கு தலைமுடி இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்றாவது நாளிலேயே உணவு சாப்பிட ஆரம்பித்தார். இதற்கு காரணம் இளம் பெண் தனது சொந்த தலைமுடியை இழுத்து அதை சாப்பிட்டு வந்துள்ளார். 

இதன் பெயர் ட்ரைகோட்டிலோமேனியா. இது ஓர் உளவியல் கோளாறு. மனநல மருத்துவர் ஆலோசனை பெற்று இதிலிருந்து வெளியே வரலாம். தற்போது அப்பழக்கத்திலிருந்து விடுபட அப்பெண்ணுக்கு இச்சிகிச்சை தரப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டார்.